மார்ச் 02, 2016

ஊர்ப்புதிர் - 33

ஊர்ப்புதிர் - 33 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 33 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அனகாபுத்தூர்                               
2.     நெடுங்குளம்                                      
3.     காருகுறிச்சி                              
4.     நாச்சியார் கோயில்                               
5.     வடக்காரவயல்                              
6.      மீஞ்சூர்   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 32 க்கு விடை:   " கிருஷ்ணகிரி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " கிருஷ்ணகிரி ",  தமிழ்நாடு  கிருஷ்ணகிரி  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.      இந்நகரம் முன்னாளில் " எயில்நாடு " என அழைக்கப்பட்டதாக தெரிகிறது.  
3.     இந்நகரம் பல ஆண்டு கால பழமை வாய்ந்த ஓவியங்களையும் கற்சிலைகளையும் கொண்டுள்ளது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இங்கு அதிகம் காணப்படுகிறது.  
4.  கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையானது வரலாற்றுப் புகழ்வாய்ந்த "பாராமகால்" என்று அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்களில் முதன்மையானது.  
5.   இந்நகரம் மாம்பழ உற்பத்தியில் மிக்கிய இடமாக விளங்குகிறது. தோத்தாபுரி, அல்போன்சா மாம்பழங்களிலிருந்து சாறு . தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றது.  மாம்பழங்களும் பெருமளவில் ஏற்றுமதியாகின்றன.  
6.      இங்கு வருடந்தோறும்  நடைபெறும்  மாம்பழத் திருவிழா மிகவும் பிரசித்தி  பெற்றதாகும். 
7.  கிருஷ்ணகிரிக்கு பக்கத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள் - கிருஷ்ணகிரி அணை, ராமாபுரம் ராமர் கோவில், அருங்காட்சியகம் ஆகியவை.         
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ் 

8 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 3.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. அனகாபுத்தூர் 4
    2. நெடுங்குளம் 6
    3. காருகுறிச்சி 1
    4. நாச்சியார் கோயில் 3
    5. வடக்காரவயல் 5
    6. மீஞ்சூர் 2

    விடை: காஞ்சிபுரம்

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 3.3.2016 அன்று அனுப்பிய விடை:

    Kanchipuram

    பதிலளிநீக்கு
  3. திருமதி சாந்தி நாராயணன் 3.3.2016 அன்று அனுப்பிய விடை:

    காருகுறிச்சி
    மீஞ்சூர்
    நாச்சியார் கோயில்
    அனகாபுத்தூர்
    வடக்காரவயல்
    நெடுங்குளம்

    இறுதி விடை : காஞ்சிபுரம்

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.3.2016 அன்று அனுப்பிய விடை:

    "காஞ்சிபுரம்"

    பதிலளிநீக்கு
  5. திரு சந்தானம் குன்னத்தூர் 8.3.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை:--- காஞ்சிபுரம்

    பதிலளிநீக்கு
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 8.3.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை : காஞ்சிபுரம்

    பதிலளிநீக்கு