மார்ச் 25, 2016

ஊர்ப்புதிர் - 36

ஊர்ப்புதிர் - 36 ல்,   தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                             

ஊர்ப்புதிர் - 36 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பின்னந்துரை                                                                             2.     கந்தனேரி                                        

3.     கோடாரங்குளம்                                
4.     சாத்துபாளையம்                                 
5.     ஊமச்சிகுளம்                                 
6.      மேல்பாக்கம்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.  
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 35 க்கு விடை:   " புதுக்கோட்டை "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " புதுக்கோட்டை ",  தமிழ்நாடு  புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகரான ஒரு நகராட்சி.       
2.      இந்நகரம் வெள்ளாறு ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளது .
3.     பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும், மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப்பகுதியே புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது.      
4.      இங்கு கடலை, முந்திரி, மற்றும் பல கோடைக்காலப் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.  
5.   இந்நகரைச் சுற்றிய பல பகுதிகளில் பெருங் கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ராமராவ் 

5 கருத்துகள் :

 1. திரு சந்தானம் குன்னத்தூர் 25.3.2016 அன்று அனுப்பிய விடை:

  ஊத்தங்கரை.

  பதிலளிநீக்கு
 2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 25.3.2016 அன்று அனுப்பிய விடை:

  Oothankarai

  பதிலளிநீக்கு
 3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 25.3.2016 அன்று அனுப்பிய விடை:

  ஊத்தங்கரை

  பதிலளிநீக்கு
 4. திரு சுரேஷ்பாபு 27.3.2016 அன்று அனுப்பிய விடை:

  1. பின்னந்துரை 6
  2. கந்தனேரி 3
  3. கோடாரங்குளம் 4
  4. சாத்துபாளையம் 2
  5. ஊமச்சிகுளம் 1
  6. மேல்பாக்கம் 5

  விடை: ஊத்தங்கரை

  பதிலளிநீக்கு