ஊர்ப்புதிர் - 100ல், தமிழகத்தில் உள்ள பத்து (10) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 10-வது ஊரின் 10-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ பத்து (10) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 100 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. காஞ்சிபுரம்
2. இளவங்கர்குடி
3. திருக்கழுக்குன்றம்
4. வெண்மான்கொண்டான்
5. மணப்பாறை
6. அபிவிருத்தீஸ்வரம்
7. விருதுநகர்
8. பெரம்பலூர்
9. திண்டிவனம்
10. கைவிடந்தாங்கல்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு : தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்