மே 21, 2015

ஊர்ப்புதிர் - 10


ஊர்ப்புதிர் - 10 ல், தமிழகத்தில் உள்ள  ஒரு ஊரைப் பற்றிய கவிதை ஒன்று குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னொரு ஊரின் பேராம்
       முதலெழுத் தில்லா விட்டால் 
நன்னகர் மன்னர் பேராம் 
     நடுவெழுத் தில்லா விட்டால்
கன்னமா மிருகத் தின்பேர்
     கடையெழுத் தில்லா விட்டால் 
உன்னிய தேனின் பேராம் 
     ஊரின் பேர்விளம் புவீரே.   
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ஊர்ப்புதிருக்கான இந்த கவிதையை புனைந்தவர் யாரென்று தெரிய வில்லை. தெரிந்தவர்கள் எழுதி அனுப்பினால் நன்று.
 
இதுபோன்று வேறு எந்த ஊருக்காவது  ஊர் பெயரை கண்டுபிடிக்க குறிப்புகளுடன் கவிதை வடிவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த கவிதையை அனுப்பினால் நன்று.
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 08 க்கு விடை:   "  திண்டிவனம்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   " திண்டிவனம்  ",  தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி . 
2.   திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. அதனால்தான் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
3.      1000 வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில் (பெரிய கோவில்) மிகவும் பிரசித்தி பெற்றது. 
4.    Oilseeds Research Station இங்கு அமைந்துள்ளது.
5.    அருகிலுள்ள செஞ்சிக் கோட்டையும், கல்வராயன் மலையும் சுற்றுலாத் தலங்களாகும்.    
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   
 
 
 
 

 

மே 02, 2015

ஊர்ப்புதிர் - 09


ஊர்ப்புதிர் - 09 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 09 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     கொடைக்கானல்      
2.     தொட்டியம்          
3.     வாசுதேவநல்லூர்         
4.     திருவையாறு        
5.     காஞ்சிபுரம்      
6.       பண்ருட்டி   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 08 க்கு விடை:   "  நாகர்கோவில்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "சிதம்பரம் ",  தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2.   இந்த நகரம் நாஞ்சில் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.     
3.  ஸ்ரீநாகராஜாவுக்கு திருக்கோவில்  இங்கு அமைந்துள்ளதால் இந்த நகரம் நாகர்கோவில் என்று அழைக்கப் படுகிறது.     
4.   மீன்பிடிவலை தயாரிப்பதில் இந்த நகரம் மிகவும் பிரசித்தி பெற்றது.   
5.  ISRO Propulsion Complex (Liquid Propulsion Systems Centre) இங்கு அமைந்துள்ளது. Indian Rare Earths Limited (IREL) தொழிற்சாலையும் இங்கு அமைந்துள்ளது. 
6.   கன்னியாகுமரி இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், மண்டைக்காடு ஸ்ரீபகவதியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
7.   இங்கு அமைந்துள்ள St.Xavier Church, CSI Home Church மிகவும் பழமையானவையும், புகழ் பெற்றவையும் ஆகும். 
8.   இந்த நகரத்தை ஒட்டிய சுற்றுலாத் தலங்கள்:  முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், பொய்கை அணை, உலக்கை அருவி. 
9.   கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யும் இந்த ஊரை சேர்ந்தவர்கள்.          
        
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்