ஏப்ரல் 20, 2015

ஊர்ப்புதிர் - 08


ஊர்ப்புதிர் - 08 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 08 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     வேலூர்     
2.     திண்டுக்கல்         
3.     நாட்டரசன் கோட்டை        
4.     திசையன்விளை        
5.     அகத்தீஸ்வரம்     
6.       புதுக்கோட்டை  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 07 க்கு விடை:   "  சிதம்பரம்   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "சிதம்பரம் ",  தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி .
2.   இந்த நகரம் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்றது. ஆகையால் ஆலயநகர் என்றும் நாட்டியநகர் என்றும் அழைக்கப் படுகிறது.    
3.  இந்த நகரம் தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும், தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.    
4.   இங்குள்ள நடராசர் ஆலயம்  மிகப் பழமையானதும், மிகவும் புகழ் பெற்றதுமாகும்.  
5.  அண்ணாமலை பல்கலைக்கழகம் இங்குதான் உள்ளது.
6.   உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகள் / மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள பிச்சாவரம் இங்கிருந்து  சுமார் 10  மைல் தொலைவில் உள்ளது. புலம்பெயர் வெளிநாட்டுப் பறவைகள் தங்குமிடமாக இருப்பதால் பிச்சாவரம் காடுகள் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகின்றன.       
        
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்