நவம்பர் 21, 2015

ஊர்ப்புதிர் - 23

ஊர்ப்புதிர் - 23 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 23 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     வாடிப்பட்டி                     
2.     கும்பக்கரை                           
3.     பேரளம்                      
4.     வெல்லங்குளி                      
5.     பர்கூர்                   
6.      வடமதுரை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 22 க்கு விடை:   "  வேளாங்கண்ணி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.    " வேளாங்கண்ணி  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பேரூராட்சி .     
2.    நாகப்பட்டினத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி அமைந்துள்ளது. 
3.    காவிரி நதியின் ஒரு கிளை நதியான வெள்ளையாறு இந்நகரின் தென்புறமாக ஓடி கடலில் கலக்கிறது. 
4.    கத்தோலிக்க கிருத்தவர்களின் மிகப்பெரிய புனிதத் தலங்களில் ஒன்றாக வேளாங்கண்ணி கருதப்படுகிறது. 
5.  இங்கு அமைந்துள்ள மாதா கோவில் இரட்டை கோபுரங்கள் கொண்டது. தூய ஆரோக்கிய அன்னை பெயரில் கட்டப்பட்டதால், இது தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.. 
6.  எல்லா சமயத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து அன்னை மரியாவுக்கு பிரார்த்தனைகள் செலுத்துகிறார்கள்.   நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்பவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதால் நன்றிக் காணிக்கைகளையும் அளிக்கிறார்கள்.     
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 14, 2015

ஊர்ப்புதிர் - 22

ஊர்ப்புதிர் - 22 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  
ஊர்ப்புதிர் - 22  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     ஜெயங்கொண்டம்                    
2.     கருங்குழி                          
3.     வேலூர்                     
4.     செக்கானூரணி                     
5.     விளாத்திகுளம்                  
6.      திருக்கழுக்குன்றம்                 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது ஒரு புண்ணியத்தலம். 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 21 க்கு விடை:   "  மதுரவாயல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.       " மதுரவாயல் ",  தற்போது தமிழ்நாடு  சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி..     
2.        மதுரவாயல் 2009 க்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாய் இருந்தது.
3.    மதுரவாயல்  சென்னைத் துறைமுகத்திலிருந்து 8 வது  மைலில் இருப்பதால் மதுரவாயில்  "எட்டாவது மைல் " என்ற பெயரையும் கொண்டுள்ளது.
4.     மதுரவாயல் என்றால் அழகான வாயல் என்று பொருள். சென்னை மாநகரின் நுழைவாயல் என்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுவார்.
5.        மதுரவாயல் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 
6.      எண்ணூர் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டு சில அரசியல் காரணங்களால் தடைபட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது    
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 07, 2015

ஊர்ப்புதிர் - 21

ஊர்ப்புதிர் - 21 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  
ஊர்ப்புதிர் - 21  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     ராஜபாளையம்                   
2.     அகரம்                         
3.     சோளிங்க நல்லூர்                    
4.     முதுகுளத்தூர்                    
5.     மல்லியம்                 
6.      ஆரல்வாய்மொழி                
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒரு பகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 20 க்கு விடை:   "  ஒரத்தநாடு  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.       "ஓரத்தநாடு ",  தமிழ்நாடு  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு பேரூராட்சி .     
2.        இந்த ஊர் முத்தம்பாள்புரம் என்றும் முத்தம்பால்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.        
3.       ஒரத்தநாடு என்னும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகிப் பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.  
4.     இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு முந்தைய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும். காசிக்கு சென்று காசி விஸ்வநாதரையும் காசி விசாலாட்சி அம்மனையும் தரிசிக்க முடியாதவர்கள் இந்த கோயிலில் இரு தெய்வங்களையும் தரிசிக்கலாம்.  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 01, 2015

ஊர்ப்புதிர் - 20

ஊர்ப்புதிர் - 20 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 20  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     காரமடை                  
2.     கொல்லங்கோடு                        
3.     திருவாதவூர்                   
4.     ஒட்டப்பிடாரம்                   
5.     பார்த்திபனூர்                
6.      சண்முகநாதபுரம்                
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் ஒரு சட்ட மன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 19 க்கு விடை:   "  அறந்தாங்கி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.       "அறந்தாங்கி  ",  தமிழ்நாடு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  ஒரு நகராட்சி.     
2.      புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான நதியான வெள்ளாறு இந்த நகரின் மேற்குப் பகுதியை கடந்து சென்று வங்கக்கடலை அடைகிறது.       
3.       பிரம்மாண்ட கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுவதை காணலாம். இந்த கோட்டையின் சுவர்கள் செங்கற்களாலோ அல்லது பாறைகளாலோ கட்டப்பட்டதல்ல. அதன் பெரிய இடைவெளிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளதை காணலாம். கோட்டையை சுற்றி பிரம்மாண்டஅகழி உள்ளது. 
4.     பழமைவாய்ந்த சிவன் கோவில் ஒன்று இங்குள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்