மார்ச் 25, 2016

ஊர்ப்புதிர் - 36

ஊர்ப்புதிர் - 36 ல்,   தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                             

ஊர்ப்புதிர் - 36 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பின்னந்துரை                                                                             2.     கந்தனேரி                                        

3.     கோடாரங்குளம்                                
4.     சாத்துபாளையம்                                 
5.     ஊமச்சிகுளம்                                 
6.      மேல்பாக்கம்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.  
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 35 க்கு விடை:   " புதுக்கோட்டை "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " புதுக்கோட்டை ",  தமிழ்நாடு  புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகரான ஒரு நகராட்சி.       
2.      இந்நகரம் வெள்ளாறு ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளது .
3.     பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும், மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப்பகுதியே புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது.      
4.      இங்கு கடலை, முந்திரி, மற்றும் பல கோடைக்காலப் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.  
5.   இந்நகரைச் சுற்றிய பல பகுதிகளில் பெருங் கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ராமராவ் 

மார்ச் 16, 2016

ஊர்ப்புதிர் - 35

ஊர்ப்புதிர் - 35 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 35  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     போடம்பட்டி
2.     சூலக்கரை                                        
3.     ஒத்தக்கடை                                
4.     மதுரை                                 
5.     நாகர்கோவில்                                
6.      புவனகிரி     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.  
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 33 க்கு விடை:   " பெரியகுளம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " பெரியகுளம் ",  தமிழ்நாடு  தேனி  மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.       
2.       கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் மிகவும் செழிப்பான பிரதேசங்களில் ஒன்று.  விவசாயம் இங்கு முக்கிய தொழில்.
3.    வராக நதி, இந்நகரை வடகரை, தென்கரை என்று இரண்டு பிரிவாக பிரிக்கிறது. இந்நதியில் எப்போதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதால் வற்றாத நதி என்று அழைக்கப்பட்டு பின் வராக நதி என்று பெயர் மாறியதாக சொல்லப்படுகிறது.     
4.  இங்கு மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்நகரம் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படுகிறது. இலக்கியத்தில் இந்நகரம் குளந்தை நகரம் என்றும் அழைக்கப்பட்டது. 
5.      இந்நகரத்தில் கி.பி.10ம்  நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருள்மிகு பால சுப்ர மணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அருள்மிகு கௌமாரியாம்மன் கோயில், வீச்சுகருப்பையா கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காளஸ்திரி  கோயில், பகவதி அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் இவையும் இங்கு அமைந்துள்ளன.   
6.   பெரியகுளத்துக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்: கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சோத்துப்பாறை ஆணை, தீர்த்தத் தொட்டி, வைகை அணை ஆகியவை.  
7.       இவ்வூர் பிரபலங்கள்:   முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து, தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா, தமிழ் திரைப்பட நடிகர்கள் சுந்தர்ராஜன், சுருளிராஜன் ஆகியோர். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

மார்ச் 09, 2016

ஊர்ப்புதிர் - 34

ஊர்ப்புதிர் - 34 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 34  க்கான ஊர்களின் பெயர்கள்:  

1.     எரியூர்                                
2.     கல்குப்பம்                                       
3.     விளாங்குறிச்சி                               
4.     பெண்ணாடம்                                
5.     இளையநல்லூர்                               
6.      அம்மகளத்தூர்    

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.                                                                                                                       ராமராவ் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 33 க்கு விடை:   " காஞ்சிபுரம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " காஞ்சிபுரம் ",  தமிழ்நாடு  காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான ஒரு நகராட்சி.       
2.       இந்நகரம் பாலாற்றின் (வேகவதி ஆற்றின்)கரையில் அமைந்துள்ளது.   
3.   காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.   
4.   தமிழகத்தின் முன்னாள்  முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது. அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் இங்கு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், புற்றுநோய் மருத்துவமனை இவை அமைக்கப்பட்டன..
5.   முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.  
6.     ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ண பெருமாள் கோயில், வைகுண்டநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். 
7.      அருணகிரிநாதர் தமது திருப்புகழ் பாடல்களில் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப்  போற்றிப் பாடியுள்ளார்.   
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

மார்ச் 02, 2016

ஊர்ப்புதிர் - 33

ஊர்ப்புதிர் - 33 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 33 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அனகாபுத்தூர்                               
2.     நெடுங்குளம்                                      
3.     காருகுறிச்சி                              
4.     நாச்சியார் கோயில்                               
5.     வடக்காரவயல்                              
6.      மீஞ்சூர்   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 32 க்கு விடை:   " கிருஷ்ணகிரி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " கிருஷ்ணகிரி ",  தமிழ்நாடு  கிருஷ்ணகிரி  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.      இந்நகரம் முன்னாளில் " எயில்நாடு " என அழைக்கப்பட்டதாக தெரிகிறது.  
3.     இந்நகரம் பல ஆண்டு கால பழமை வாய்ந்த ஓவியங்களையும் கற்சிலைகளையும் கொண்டுள்ளது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இங்கு அதிகம் காணப்படுகிறது.  
4.  கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையானது வரலாற்றுப் புகழ்வாய்ந்த "பாராமகால்" என்று அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்களில் முதன்மையானது.  
5.   இந்நகரம் மாம்பழ உற்பத்தியில் மிக்கிய இடமாக விளங்குகிறது. தோத்தாபுரி, அல்போன்சா மாம்பழங்களிலிருந்து சாறு . தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றது.  மாம்பழங்களும் பெருமளவில் ஏற்றுமதியாகின்றன.  
6.      இங்கு வருடந்தோறும்  நடைபெறும்  மாம்பழத் திருவிழா மிகவும் பிரசித்தி  பெற்றதாகும். 
7.  கிருஷ்ணகிரிக்கு பக்கத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள் - கிருஷ்ணகிரி அணை, ராமாபுரம் ராமர் கோவில், அருங்காட்சியகம் ஆகியவை.         
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்