நவம்பர் 21, 2015

ஊர்ப்புதிர் - 23


ஊர்ப்புதிர் - 23 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 23 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     வாடிப்பட்டி                     
2.     கும்பக்கரை                           
3.     பேரளம்                      
4.     வெல்லங்குளி                      
5.     பர்கூர்                   
6.      வடமதுரை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 22 க்கு விடை:   "  வேளாங்கண்ணி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.    " வேளாங்கண்ணி  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பேரூராட்சி .     
2.    நாகப்பட்டினத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி அமைந்துள்ளது. 
3.    காவிரி நதியின் ஒரு கிளை நதியான வெள்ளையாறு இந்நகரின் தென்புறமாக ஓடி கடலில் கலக்கிறது. 
4.    கத்தோலிக்க கிருத்தவர்களின் மிகப்பெரிய புனிதத் தலங்களில் ஒன்றாக வேளாங்கண்ணி கருதப்படுகிறது. 
5.  இங்கு அமைந்துள்ள மாதா கோவில் இரட்டை கோபுரங்கள் கொண்டது. தூய ஆரோக்கிய அன்னை பெயரில் கட்டப்பட்டதால், இது தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.. 
6.  எல்லா சமயத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து அன்னை மரியாவுக்கு பிரார்த்தனைகள் செலுத்துகிறார்கள்.   நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்பவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதால் நன்றிக் காணிக்கைகளையும் அளிக்கிறார்கள்.     
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

6 கருத்துகள் :

  1. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 21.11.2015 அன்று அனுப்பிய விடை:

    " pa ra ma k ku di "

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 21.11.2015 அன்று அனுப்பிய விடை:

    "பரமக்குடி"

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் 21.11.2015 அன்று அனுப்பிய விடை:

    "பரமக்குடி"

    பதிலளிநீக்கு
  4. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் 22.11.2015 அன்று அனுப்பிய விடை:

    1. வாடிப்பட்டி 6
    2. கும்பக்கரை 4
    3. பேரளம் 2
    4. வெல்லங்குளி 5
    5. பர்கூர் 1
    6. வடமதுரை 3

    answer - paramakkudi

    பதிலளிநீக்கு