அக்டோபர் 25, 2015

ஊர்ப்புதிர் - 19

ஊர்ப்புதிர் - 19 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 19  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     உறங்கான்பட்டி                 
2.     ஊர்மேலழகியான்                       
3.     கயத்தாறு                  
4.     அந்தியூர்                  
5.     உளுந்தூர்பேட்டை               
6.       திருத்தங்கல்               
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் ஒரு சட்ட மன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 18 க்கு விடை:   "  மார்த்தாண்டம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.       "மார்த்தாண்டம் ",  தமிழ்நாடு  கன்னியாகுமாரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒரு வணிகத் தலமாகும்.    
2.     இந்த ஊர் "தொடுவட்டி" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூரை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா நினைவாக இந்நகருக்கு இந்தப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.      
3.       மார்த்தாண்டம் தேன் புகழ்பெற்று விளங்குகிறது.  தேனீ வளர்ப்பு, தேன் தயாரிப்பு இங்கு முக்கிய தொழிலாகும். மார்த்தாண்டம் எங்கும் பச்சைப் பசேல் என்றிருக்கும்.
4.     இங்குள்ள பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய மற்றும் பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர், மதுரை, வேளாங்கண்ணி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கும், பெங்களூர், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  
5.   இவ்வூருக்கு அருகில் காணத்தக்க இடங்கள்:  பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பேச்சிப்பாறை நீர்த்தேக்கம், தெங்கபட்டணம் கடற்கரை, சித்தாரல் ஜெயின் கோயில் ஆகியவை. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

அக்டோபர் 17, 2015

ஊர்ப்புதிர் - 18

ஊர்ப்புதிர் - 18 ல்தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 18  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     புதுக்கோட்டகம்                
2.     வேடந்தாங்கல்                      
3.     சீர்காழி                  
4.     திருப்புவனம்                 
5.     கிணத்துக்கடவு              
6.       மானாமதுரை   
7.       வேளாங்கண்ணி               
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 17 க்கு விடை:   "  எட்டயபுரம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.   "எட்டயபுரம் ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி.   
2.  எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே  குறிப்பிடுகின்றனர்.     
3.     மகாகவி பாரதியார் இங்கு பிறந்தவர். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார். 
4.     இவ்வூர் மக்களின் முக்கிய தொழில்கள்:  நெசவுத் தொழில், தீப்பெட்டி தொழில், வேளாண்மை. 
5.   இவ்வூரில் காணத்தக்க இடங்கள்:   பாரதியார் மணி மண்டபம், பாரதியார் பிறந்த வீடு, முத்துசாமி தீட்சிதர் நினைவகம், உமறுப் புலவர் தர்கா, எட்டப்பன் அரண்மனை, மாவீரன் அழகு முத்துக்கோன் அரண்மனை 
6.   அருகாமையிலுள்ள பார்க்கக்கூடிய இடங்கள்:   வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு, எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம், அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

அக்டோபர் 10, 2015

ஊர்ப்புதிர் - 17

ஊர்ப்புதிர் - 17 ல்தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 17  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     வைத்தீஸ்வரன் கோவில்              
2.     கண்டமனூர்                     
3.     குமாரபாளையம்                 
4.     எடப்பாடி                
5.     திருமயம்             
6.      கோட்டையூர்  
7.      சிங்கம்புணரி              
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 16 க்கு விடை:   "  செங்கல்பட்டு   "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.   "செங்கல்பட்டு ",  தமிழ்நாடு  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி . இது சென்னை மாநகரின் புறநகர் பகுதியாகும்.  
2.  முன்பு இங்குள்ள நீர்நிலைகளில் செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என அழைக்கப்பட்டது.  அதுவே மருவி செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.          
3.      விஜயநகரப் பேரரசு வழி அரசர் கட்டிய கோட்டை இங்குள்ளது. 
4.     சுற்றுலா தலங்களான மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், காஞ்சிபுரம், கொளவாய் ஏரி போன்றவை இந்நகருக்கு வெகு பக்கத்தில் அமைந்துள்ளதால், செங்கல்பட்டு ஒரு சுற்றுலா நகராக உருவெடுத்துள்ளது.     

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

அக்டோபர் 03, 2015

ஊர்ப்புதிர் - 16

ஊர்ப்புதிர் - 16 ல்தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 16  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     கல்லல்             
2.     பட்டுக்கோட்டை                    
3.     திருச்செங்கோடு                
4.     சென்னிமலை               
5.     தென்கரை             
6.       பத்மநாபபுரம் 
7.       நாங்குநேரி             
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 15 க்கு விடை:   "  வலங்கைமான்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.      "வலங்கைமான் ",  தமிழ்நாடு  திருவாரூர்  மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி .
2.       இங்கு அமைந்திருக்கும் மகா மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.         
3.      மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என பெயர் வந்ததாகக் கூறுவர்.  சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது அந்த மான் வலது புறமாக ஓடியதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாக சிலர் கூறுவர்.    

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்