டிசம்பர் 28, 2015

ஊர்ப்புதிர் - 24

ஊர்ப்புதிர் - 24 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 24 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     திருப்பரங்குன்றம்                      
2.     கல்லக்குடி                           
3.     கோபிசெட்டிப்பாளையம்                       
4.     சாயல்குடி                       
5.     தேவிபட்டணம்                    
6.      ஜோலார்பேட்டை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 23 க்கு விடை:   "  பரமக்குடி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.      " பரமக்குடி ",  தமிழ்நாடு  ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.      இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.  
3.  பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். மொத்த தமிழகத்திற்கான மிளகாய் விலை இங்குதான் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  
4.    பரமக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 
5.  இங்கு அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில், ஐந்து முனை முருகன் கோவில் பிரசித்தி பெற்றவை. சௌராஷ்டிரர்களால் கொண்டாடப்படும் காமன் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.       
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

5 கருத்துகள் :

 1. கோவில்பட்டி - முத்து

  பதிலளிநீக்கு
 2. திரு சுரேஷ்பாபு 28.12.2015 அன்று அனுப்பிய விடை:

  1. திருப்பரங்குன்றம் 4
  2. கல்லக்குடி 6
  3. கோபிசெட்டிப்பாளையம் 1
  4. சாயல்குடி 3
  5. தேவிபட்டணம் 2
  6. ஜோலார்பேட்டை 5

  விடை: கோவில்பட்டி.

  பதிலளிநீக்கு
 3. திரு சந்தானம் குன்னத்தூர் 28.12.2015 அன்று அனுப்பிய விடை:

  " KOVILPATTI "

  பதிலளிநீக்கு
 4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 30.12.2015 அன்று அனுப்பிய விடை:

  " கோவில்பட்டி "

  பதிலளிநீக்கு