ஆகஸ்ட் 30, 2015

ஊர்ப்புதிர் - 12

ஊர்ப்புதிர் - 12 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 12 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     தர்மபுரி        
2.     சின்னசேலம்                
3.     கழுகுமலை           
4.     பட்டிவீரன்பட்டி          
5.     விருத்தாசலம்      
6.       மணப்பாறை     
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 11 க்கு விடை:   "  திண்டுக்கல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "திண்டுக்கல் ",  தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2.  ஊரின் நடுவே திண்டை (தலையணை) போல பெரிய மலை இருப்பதால் திண்டுக்கல் என்று பெயர் வந்ததாக கருதலாம். திண்டி என்ற கொடுங்கோல் மன்னன் இந்நகரை ஆட்சி புரிந்ததாகவும், அவனை சிவன் (ஈஸ்வரன்) அழித்ததனால் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் கருத்து நிலவுகிறது.      
3.  திண்டுக்கல்லை ஆண்ட நாயக்கர்களால் கட்டப்பட்ட மலைக்கோட்டையை அவர்களுக்குப் பின் ஆண்ட ஹைதர் அலி கோட்டையை சுற்றி ராணுவ தளவாடங்கள் வைக்கும் அறைகளையும், வீரர்கள் தாங்கும் அறைகளையும் உருவாக்கினார். அதற்குப்பின் இந்த மலைக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் பீரங்கி மேடு ஒன்றும் அமைக்கப்பட்டது.       
4.  மலைக்கோட்டை மீது அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி கோவில் கருவறைகளில் சிலைகள் இல்லாமல் இப்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் திண்டுக்கல் மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.     
5.   ஹைதர்  அலியின்  இளைய  சகோதரி  அமீர்-உன்-நிஷா பேகம்  இறந்தபின்  அவர்  சமாதியில்  கட்டப்பட்ட பள்ளிவாசல்  இன்றும் பேகம்பூர் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது.   
6.  19-ஆம் நூற்றாண்டில் இங்கு கட்டப்பட்டுள்ள புனித ஜோசப் தேவாலயம் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.   
7.  திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டுக்கள் உலகப் புகழ் பெற்றவை. திண்டுக்கல்லில் நிறைய தோல் தொழிற்சாலைகளும், கைத்தறி தொழிற்சாலைகளும் உள்ளன. திண்டுக்கல் அருகில் அமைந்துள்ள சின்னாளப்பட்டியில் தயாராகும் சேலைகள் மிகுந்த புகழ் பெற்றவை. திண்டுக்கல்லில்  தயாரிக்கப்படும் சுருட்டுகளும் பெயர் பெற்றவை. மத்திய அரசாங்கத்தின் புகையிலை ஆராய்ச்சி நிலையம் இங்கு அமைந்துள்ளது. 
8.  திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் பிரியாணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
9.  சுற்றுலாத் தலங்களான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோடை வாசஸ்தலமான கொடைக்கானாலும் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 
   . 

ஆகஸ்ட் 22, 2015

ஊர்ப்புதிர் - 11

ஊர்ப்புதிர் - 11 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 11 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     கானாடுகாத்தான்       
2.     விருதுநகர்               
3.     திருநாகேஸ்வரம்          
4.     நாகர்கோவில்         
5.     பரமக்குடி       
6.      ஆண்டிபட்டி    
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 10 க்கு விடை:   "  மதுரை  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "மதுரை ",  தமிழ்நாடு மதுரை  மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2. இந்த நகரம் கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் என்றும் அழைக்கப்படுகிறது.     
3.  மருத  மரங்கள் மிகுதியாக இருந்ததால், மருதத்துறை என்பது மருவி மதுரை ஆனது என ஒரு கருத்தும், சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் (இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.      
4.  இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான  மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.    
5. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.  
6.  மதுரை மாநகரின் முக்கிய வரலாற்று நினைவிடங்களில் முக்கியமானவை மீனாட்சி அம்மன் கோவிலும், திருமலை நாயக்கர் மகாலும் ஆகும்.  
7. மதுரை மாநகரமானது மீனாட்சி அம்மன் கோவிலை பொது மையமாகக் கொண்டு கோவிலைச் சுற்றி நான்கு நாற்கர தெருக்களாக அமைக்கப்பட்டதாகும். இவ்வமைப்பு மதுரையை ஆண்ட முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி.பி.1159-64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி மூல, மாசி வீதிகள் என்று அழைக்கப்படுகின்றன. 1837 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் கோவிலைச் சுற்றியிருந்த கோட்டை அகற்றப்பட்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேஸ்திரி வீதிகள் அமைக்கப்பட்டன. 
8.  சித்திரைத் திருவிழா (மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்) ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய திருவிழா. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் அவனியாபுரம் ஏறுதழுவல், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பெயர் பெற்றவை. 
9.  சுற்றுலாத் தலங்களான முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், மற்றும் பழமுதிர் சோலை மதுரைக்கு வெகு பக்கத்தில் அமைந்துள்ளன.
10. மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழில் துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. ரப்பர், ரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன. மருத்துவக் கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. 
11.  பன்னாட்டு  விமான  நிலையம் மதுரையில் அமைந்துள்ளது. மதுரையில் மிகப் பெரிய தொடர்வண்டி புகைவண்டி நிலையமும், 3 பெரிய பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. 
12. மதுரை நகரில் அனைத்திந்திய வானொலி, சூரியன் எப்.எம்., ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப்.எம் போன்ற பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, மாலை மலர், தமிழ் முரசு ஆகிய தமிழ் நாளிதழ்களும், ஹிந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித் தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன.        
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்