மார்ச் 28, 2015

ஊர்ப்புதிர் - 07

ஊர்ப்புதிர் - 07 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 07 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மதகுப்பட்டி    
2.     ஆண்டிபட்டி        
3.     பெரியகுளம்       
4.     கோயம்புத்தூர்       
5.     சிங்கப்பெருமாள் கோயில்    
6.       செக்கானூரணி 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 05 க்கு விடை:   "  வாணியம்பாடி   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "வாணியம்பாடி ",  தமிழ்நாடு வேலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி .
2.   இந்த நகரம் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.    
3.  தோல்  பதனிடும்  தொழிற்சாலைகளும்,  தோல் ஆடைகள் மற்றும்   தோல்    காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்  இங்கு நிறைய உள்ளன. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, தோலாலான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.   
4.   வாணியம்பாடி பிரியாணி மிகவும் பிரபலமான ஒன்று.  
5.  இங்கு அமைந்துள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலும், அதிதீஸ்வரர் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
6.   ஆசியா கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கு கருவி  இங்கு பக்கத்தில் உள்ள காவலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.     
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   

மார்ச் 19, 2015

ஊர்ப்புதிர் - 06

ஊர்ப்புதிர் - 06 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 06 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மேட்டுப்பாளையம்   
2.     சமயநல்லூர்       
3.     குன்னக்குடி      
4.     வால்பாறை       
5.     ராணிப்பேட்டை   
6.       உசிலம்பட்டி
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 05 க்கு விடை:   "  கன்னியாகுமரி   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "கன்னியாகுமரி ",  தமிழ்நாடு கன்னியாகுமரி  மாவட்டத்தின்  தலைநகராக அமைந்துள்ள ஒரு பேரூராட்சி .
2.   இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூணும்  இணைகின்றன.   
3.   இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும்.  
4.  இங்குள்ள கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும்.  காந்தியடிகளுடைய மற்றும் காமராஜர் நினைவு மண்டபங்களும் இங்குள்ளன. 
5.  சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன்  நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும்  இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
6.   இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இந்த கடற்கரையில் கூடுகின்றனர். 
7.   இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டது. 
8.   மகாத்மா காந்தியின் அஸ்தி இங்குதான் கரைக்கப்பட்டது.      
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்