ஜனவரி 26, 2015

ஊர்ப்புதிர் - 04

ஊர்ப்புதிர் - 04 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊர்ப்புதிர் - 04 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     கருங்குழி 
2.     தூத்துக்குடி     
3.     விக்கிரவாண்டி    
4.     சூலமங்கலம்     
5.     பெரம்பலூர் 
6.      கடையநல்லூர்      
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 03 க்கு விடை:   " கொடைக்கானல்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "கொடைக்கானல் ",  தமிழ்நாடு திண்டுக்கல்  மாவட்டத்தில் மதுரையிலிருந்து  சுமார்  130 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2.   கோடை வாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. 
3.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள்  இங்கே  பரவலாக  வளர்கின்றன. கடைசியாக  இந்த  மலர்கள்  2006 ம் ஆண்டு பூத்தன. .
4.  தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
5.   சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
      1.  பிரையண்ட் பார்க் 
      2.  குணா குகைகள் 
      3.  கோக்கர்ஸ் வாக் 
      4.  தொப்பித் தூக்கி பாறைகள் 
      5.  பியர் சோளா நீர்வீழ்ச்சி 
      6.  கொடைக்கானல் ஏரி 
      7.  அமைதிப் பள்ளத்தாக்கு 
      8.  தூண் பாறைகள்
      9.  வெள்ளி நீர்வீழ்ச்சி 
    10.  செண்பகனூர் அருங்காட்சியகம்    
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்  

ஜனவரி 19, 2015

ஊர்ப்புதிர் - 03


ஊர்ப்புதிர் - 03ல் , தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 03 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     நிலக்கோட்டை   
2.     திண்டிவனம்   
3.     கொடுமுடி   
4.     நாகர்கோவில்   
5.     உடையார்பாளையம்   
6.     அலங்காநல்லூர்      
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
குறிப்பு: விடைக்கான ஊர் 'திண்டுக்கல்' மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
---------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 01க்கு  விடை:   " குடியாத்தம் "
-------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "குடியாத்தம்",  தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் வேலூரிலிருந்து சுமார்  30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2. ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது.
3. காமராஜர் முதன் முதலாக 1954ல் தமிழ் நாட்டின் முதல்  மந்திரியான போது இந்த குடியாத்தம் சட்டசபை தொகுதியிலிருந்து தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இங்குள்ள கங்கை அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 1 ந்தேதியன்று நடைபெறும்  "கங்கை அம்மன் திருவிழா "மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.
-----------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 02 க்கு  விடை:   " திருத்தங்கல்  "
----------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "திருத்தங்கல்", தமிழ்நாடு விருதுநகர்  மாவட்டத்தில் விருதுநகரி லிருந்து சுமார்  20 கி.மீ. தூரத்தில், சிவகாசியிலிருந்து  2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி. திருத்தங்கல் முன்பு சிவகாசியுடன்  இணைந்திருந்தது.
2. இங்குள்ள "நின்ற நாராயணப் பெருமாள் கோயில்" இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் 108 திவ்ய தேசங்களுள் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
3. சிவகாசியைப் போலவே, திருத்தங்கல் பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங் தொழிற் சாலைகளுக்கும், கல் குவாரிகளுக்கும் பெயர் பெற்றது.   . 
 
ராமராவ்  

 

ஜனவரி 11, 2015

ஊர்ப்புதிர் - 02


ஊர்ப்புதிர் - 02ல் , தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 02 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மார்த்தாண்டம்  
2.     தியாகதுர்கம்  
3.     திண்டுக்கல்  
4.     ராமநாதபுரம்  
5.     பூவிருந்தவல்லி  
6.     அருப்புக்கோட்டை  
7.     அறந்தாங்கி    
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
குறிப்பு: விடைக்கான ஊர் 'விருதுநகர்' மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ராமராவ்  

ஜனவரி 01, 2015

ஊர்ப்புதிர் - 01


ஊர்ப்புதிரில், தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் (6 அல்லது அதற்கு மேற்பட்டவை), ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து, மேலும் அப்படியே எழுத்துக்களை சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 01 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     பரமத்தி 
2.     அரக்கோணம் 
3.     குறிஞ்சிப்பாடி
4.     மணியாச்சி 
5.     போடிநாயக்கனூர் 
6.     மதுராந்தகம் 
 
ஊர்ப்புதிரில், விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும். 
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ராமராவ்