ஜனவரி 26, 2015

ஊர்ப்புதிர் - 04

ஊர்ப்புதிர் - 04 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊர்ப்புதிர் - 04 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     கருங்குழி 
2.     தூத்துக்குடி     
3.     விக்கிரவாண்டி    
4.     சூலமங்கலம்     
5.     பெரம்பலூர் 
6.      கடையநல்லூர்      
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 03 க்கு விடை:   " கொடைக்கானல்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "கொடைக்கானல் ",  தமிழ்நாடு திண்டுக்கல்  மாவட்டத்தில் மதுரையிலிருந்து  சுமார்  130 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2.   கோடை வாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. 
3.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள்  இங்கே  பரவலாக  வளர்கின்றன. கடைசியாக  இந்த  மலர்கள்  2006 ம் ஆண்டு பூத்தன. .
4.  தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
5.   சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
      1.  பிரையண்ட் பார்க் 
      2.  குணா குகைகள் 
      3.  கோக்கர்ஸ் வாக் 
      4.  தொப்பித் தூக்கி பாறைகள் 
      5.  பியர் சோளா நீர்வீழ்ச்சி 
      6.  கொடைக்கானல் ஏரி 
      7.  அமைதிப் பள்ளத்தாக்கு 
      8.  தூண் பாறைகள்
      9.  வெள்ளி நீர்வீழ்ச்சி 
    10.  செண்பகனூர் அருங்காட்சியகம்    
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்  

10 கருத்துகள் :

 1. விருதுநகர்

  பவளமணி பிரகாசம்

  பதிலளிநீக்கு
 2. விருதுநகர் Both my wife and I solve it - separately, she with pen and paper and I on notepad. This time she got the answer in 3 minutes while I couldn't get it even after 10 minutes. She told the answer and I felt sheepish.

  பதிலளிநீக்கு
 3. 1. விக்கிரவாண்டி
  2. கருங்குழி
  3. தூத்துக்குடி
  4. கடையநல்லூர்
  5. சூலமங்கலம்
  6. பெரம்பலூர்

  விருதுநகர்

  Saringalaa Ramaroa sir?

  Anbudan,
  Nagarajan Appichigounder.

  பதிலளிநீக்கு
 4. திருமதி சாந்தி நாராயணன் 26.01.15 அன்று அனுப்பிய விடை

  விக்கிரவாண்டி
  கருங்குழி
  துத்துக்குடி
  கடையநல்லூர்
  சூரமங்கலம்
  பெரம்பலூர்

  இறுதி விடை: விருதுநகர்

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 26.01.15 அன்று அனுப்பிய விடை:

  " விருதுநகர் "

  பதிலளிநீக்கு
 7. திரு சந்தானம் குன்னத்தூர் 26.01.15 அன்று அனுப்பிய விடை:

  The order should be:-- 1.vikkiravaandi 2. karunguzhi 3. thooththukkudi 4. kadaiyanallur
  5. sulamangalam 6. perambalur.

  The final answer is VIRUDHUNAGAR

  பதிலளிநீக்கு
 8. திருமதி நாகமணி ஆனந்தம் 27.01.15 அன்று அனுப்பிய விடை:

  " Viruthunagar! Our Town! "

  பதிலளிநீக்கு
 9. திரு முத்து சுப்ரமண்யம் 26.01.15 அன்று அனுப்பிய விடை:

  " விருதுநகர் "

  பதிலளிநீக்கு