பிப்ரவரி 25, 2016

ஊர்ப்புதிர் - 32

ஊர்ப்புதிர் - 32 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 32 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     கொண்டாங்கி                              
2.     தனுஷ்கோடி                                     
3.     மாணிக்கானேரி                             
4.     கிள்ளியூர்                              
5.     நெற்குணம்                            
6.      எருமந்தாங்கல்  

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 31 க்கு விடை:   " கும்பகோணம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " கும்பகோணம் ",  தமிழ்நாடு  தஞ்சாவூர்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.  இந்நகரம் முநாளில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டது. இந்நகரம் முழுதும் கோயில்கள் நிறைந்துள்ளமையால் இது கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
3.       கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாமகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 
4.  பஞ்சகுரோசத்தலங்களான திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர் இந்நகரைச் சுற்றி அமைந்துள்ளன. 
5.       கும்பகோணம் டிகிரி காபி, கும்பகோணம் வெற்றிலை மிகவும் பிரபலம். 
6.       9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தைச் சுற்றி அமைந்துள்ளன. 
7.       கணித மேதை ராமானுஜம் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்.       
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ் 

7 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 25.2.2016 அன்று அனுப்பிய விடை:

    1. கொண்டாங்கி 5
    2. தனுஷ்கோடி 3
    3. மாணிக்கானேரி 6
    4. கிள்ளியூர் 1
    5. நெற்குணம் 4
    6. எருமந்தாங்கல் 2

    விடை: கிருஷ்ணகிரி

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 25.2.2016 அன்று அனுப்பிய விடை:

    Krishnagiri

    பதிலளிநீக்கு
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 26.2.2016 அன்று அனுப்பிய விடை:

    The answer is KRISHNAGIRI

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 26.2.2016 அன்று அனுப்பிய விடை:

    "கிருஷ்ணகிரி"

    பதிலளிநீக்கு