பிப்ரவரி 28, 2018

ஊர்ப்புதிர் - 95



ஊர்ப்புதிர் - 95ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.


ஊர்ப்புதிர் - 95 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   உண்ணாமலைக்கடை             
2.   தேவந்தாவடி           
3.   கமலப்புத்தூர்              
4.   பில்லாந்திபட்டு          
5.   நந்திபுரம்             
6.   கீகளூர்  
7.   திருச்செங்கோடு 
8.   செத்தவரை 

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.       
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.



ராமராவ் 

3 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 28.2.2018 அன்று அனுப்பிய விடை:

    3-5-8-6-2-7-4-1

    kandharvakottai

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 1.3.2018 அன்று அனுப்பிய விடை:

    கந்தர்வ கோட்டை

    பதிலளிநீக்கு