ஏப்ரல் 18, 2017

ஊர்ப்புதிர் - 76


ஊர்ப்புதிர் - 76 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 76 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    புலிவளம்
2.    தையல்குணாம்பட்டினம்                                                            
3.    இஞ்சிக்கொல்லை                                                                   
4.     குருவிமலை                                      
5.     அலங்காரமங்கலம்             
6.    திம்மராஜம்பேட்டை     
7.    குன்னாண்டார்கோவில்                         
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.  

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.4.2017 அன்று அனுப்பிய விடை:

    "திருவண்ணாமலை"

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.4.2017 அன்று அனுப்பிய விடை:

    "Thiruvannamalai"

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 18.4.2017 அன்று அனுப்பிய விடை:

    6-4-1-7-2-5-3

    திருவண்ணாமலை

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 20.4.2017 அன்று அனுப்பிய விடை:

    திருவண்ணாமலை

    பதிலளிநீக்கு