பிப்ரவரி 03, 2015

ஊர்ப்புதிர் - 05


ஊர்ப்புதிர் - 05 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 05 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     பவானி  
2.     புளியங்குடி      
3.     கப்பலூர்     
4.     சிங்கம்புணரி      
5.     பிள்ளையார்பட்டி  
6.      திருவண்ணாமலை
7.     தென்காசி        
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 04 க்கு விடை:   "  விருதுநகர்   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "விருதுநகர் ",  தமிழ்நாடு விருதுநகர்  மாவட்டத்தின்  தலைநகர். மதுரையிலிருந்து  சுமார்  50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2.   இந்த நகரின்  பழைய பெயர் " விருதுப்பட்டி ".  
3.  இங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில்  பங்குனி  மாதம் நடைபெறும் "அக்னி சட்டி திருவிழா " மிகப் பிரசித்தி வாய்ந்தது.   
4.  "வியாபார நகரம் "என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன. பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது. 
5.   "விருதுநகர் புரோட்டா " மிகச் சிறப்பு பெற்றது. 
6.   பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.     
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்  

3 கருத்துகள் :