மே 21, 2015

ஊர்ப்புதிர் - 10


ஊர்ப்புதிர் - 10 ல், தமிழகத்தில் உள்ள  ஒரு ஊரைப் பற்றிய கவிதை ஒன்று குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னொரு ஊரின் பேராம்
       முதலெழுத் தில்லா விட்டால் 
நன்னகர் மன்னர் பேராம் 
     நடுவெழுத் தில்லா விட்டால்
கன்னமா மிருகத் தின்பேர்
     கடையெழுத் தில்லா விட்டால் 
உன்னிய தேனின் பேராம் 
     ஊரின் பேர்விளம் புவீரே.   
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ஊர்ப்புதிருக்கான இந்த கவிதையை புனைந்தவர் யாரென்று தெரிய வில்லை. தெரிந்தவர்கள் எழுதி அனுப்பினால் நன்று.
 
இதுபோன்று வேறு எந்த ஊருக்காவது  ஊர் பெயரை கண்டுபிடிக்க குறிப்புகளுடன் கவிதை வடிவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த கவிதையை அனுப்பினால் நன்று.
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 08 க்கு விடை:   "  திண்டிவனம்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   " திண்டிவனம்  ",  தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி . 
2.   திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. அதனால்தான் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
3.      1000 வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில் (பெரிய கோவில்) மிகவும் பிரசித்தி பெற்றது. 
4.    Oilseeds Research Station இங்கு அமைந்துள்ளது.
5.    அருகிலுள்ள செஞ்சிக் கோட்டையும், கல்வராயன் மலையும் சுற்றுலாத் தலங்களாகும்.    
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   
 
 
 
 

 

7 கருத்துகள் :

  1. பெயரில்லா21 மே, 2015 அன்று PM 10:35

    மதுரை-- முத்துசுப்ரமண்யம்

    பதிலளிநீக்கு
  2. Wow. nice one. The answer is மதுரை. Saringlaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 21.5.2015 அன்று அனுப்பிய விடை:

    மதுரை

    பதிலளிநீக்கு
  4. திருமதி நாகமணி ஆனந்தம் 26.5.2015 அன்று அனுப்பிய விடை:

    Madurai

    பதிலளிநீக்கு
  5. திரு சந்தானம் ராமரத்தினம் 31.5.2015 அன்று அனுப்பிய விடை:

    ஊரின் பெயர் மதுரை. சரியா?

    பதிலளிநீக்கு