ஊர்ப்புதிர் - 21 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 21 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. ராஜபாளையம்
2. அகரம்
3. சோளிங்க நல்லூர்
4. முதுகுளத்தூர்
5. மல்லியம்
6. ஆரல்வாய்மொழி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 20 க்கு விடை: " ஒரத்தநாடு "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. "ஓரத்தநாடு ", தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி .
2. இந்த ஊர் முத்தம்பாள்புரம் என்றும் முத்தம்பால்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
3. ஒரத்தநாடு என்னும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகிப் பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.
4. இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு முந்தைய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும். காசிக்கு சென்று காசி விஸ்வநாதரையும் காசி விசாலாட்சி அம்மனையும் தரிசிக்க முடியாதவர்கள் இந்த கோயிலில் இரு தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்