ஊர்ப்புதிர் - 89 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 89 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. திருமங்கலம்
2. ராஜசூரியமடை
2. ராஜசூரியமடை
3. இளையான்குடி
4. செங்கல்பட்டு
5. பெரியகுளம்
6. பாபநாசம்
7. அழகர்கோவில்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு : தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.