செப்டம்பர் 25, 2015

ஊர்ப்புதிர் - 15

ஊர்ப்புதிர் - 15 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 15  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     கண்டரமாணிக்கம்            
2.     கருங்கல்                   
3.     சோழவந்தான்               
4.     வத்தலகுண்டு              
5.     சிறுநகை          
6.       பாலக்கோடு         
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 14 க்கு விடை:   "  வேதாரண்யம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.      "வேதாரண்யம் ",  தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி .
2.      வேதாரண்யம் என்பது வடமொழிப்படுத்தப்பட்ட ஊர் பெயர். இதன் தமிழ் பெயர் மறைக்காடு என்பதாகும்.        
3.    இங்கு அமைந்துள்ள மறைக்காட்டு நாதர் கோயில் (வேதாரண்யேஸ்வரர் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 
4.     வேதாரண்யம் விளக்கழகு என்ற முதுமொழி மூலம் இவ்வூரின் பெருமையை உணரலாம்.
5. இங்கு அமைந்திருக்கும் உப்பு சத்தியாக்கிரக ஸ்தூபி 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தை  நினைவூட்டும் நினைவுச் சின்னமாகும்.  
6.    வேதாரண்யத்திற்கு பக்கத்தில் அமைந்திருக்கும் கோடியக்கரை பறவைகள் சரணாலயம், கலங்கரை விளக்கம், ராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோயில்  ஆகியவை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

செப்டம்பர் 18, 2015

ஊர்ப்புதிர் - 14

ஊர்ப்புதிர் - 14 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 14  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     துவரங்குறிச்சி           
2.     கும்பகோணம்                  
3.     வேடசந்தூர்              
4.     பெரியநாயக்கன்பாளையம்             
5.     ராதாபுரம்         
6.      வீரபாண்டி        
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 13 க்கு விடை:   "  மன்னார்குடி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "மன்னார்குடி",  தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி .
2.  மன்னார்குடி என்றால் விஷ்ணுவின் தலம் என்று பொருள். இந்த நகரம் மன்னை என்றும், மன்னார்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.       
3. இங்கு அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும் மிகப் பிரசித்தி பெற்றதுமாகும். இந்த கோவிலை சுற்றியுள்ள உயரமான மதில் சுவர் மிகவும் அழகு வாய்ந்தது. மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலம் இவ்வூரின் பெருமையை உணரலாம்.
4.    இங்கு அமைந்திருக்கும் மல்லிநாதர் கோவில் மிகவும் புராதன, பிரதான ஜைனர் கோவில் ஆகும். 
5.   மன்னார்குடிக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் வடுவூர் பறவை சரணாலயம், முத்துப்பேட்டை லகூன் (சதுப்பு நிலக் காடுகள்) மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.  
      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

செப்டம்பர் 07, 2015

ஊர்ப்புதிர் - 13

ஊர்ப்புதிர் - 13 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 13  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     சாத்தான்குளம்         
2.     அவினாசி                 
3.     சேடப்பட்டி            
4.     மயிலாடுதுறை           
5.     நன்னிலம்       
6.      மேட்டூர்      
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 12 க்கு விடை:   "  விழுப்புரம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "விழுப்புரம் ",  தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான ஒரு நகராட்சி .
2.   தமிழ்நாட்டின்  இரண்டாவது மிகப் பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.      
3.   செஞ்சிக்கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும். 
4.   திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்கள் ஆகும். 
      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஆகஸ்ட் 30, 2015

ஊர்ப்புதிர் - 12

ஊர்ப்புதிர் - 12 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 12 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     தர்மபுரி        
2.     சின்னசேலம்                
3.     கழுகுமலை           
4.     பட்டிவீரன்பட்டி          
5.     விருத்தாசலம்      
6.       மணப்பாறை     
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 11 க்கு விடை:   "  திண்டுக்கல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "திண்டுக்கல் ",  தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2.  ஊரின் நடுவே திண்டை (தலையணை) போல பெரிய மலை இருப்பதால் திண்டுக்கல் என்று பெயர் வந்ததாக கருதலாம். திண்டி என்ற கொடுங்கோல் மன்னன் இந்நகரை ஆட்சி புரிந்ததாகவும், அவனை சிவன் (ஈஸ்வரன்) அழித்ததனால் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் கருத்து நிலவுகிறது.      
3.  திண்டுக்கல்லை ஆண்ட நாயக்கர்களால் கட்டப்பட்ட மலைக்கோட்டையை அவர்களுக்குப் பின் ஆண்ட ஹைதர் அலி கோட்டையை சுற்றி ராணுவ தளவாடங்கள் வைக்கும் அறைகளையும், வீரர்கள் தாங்கும் அறைகளையும் உருவாக்கினார். அதற்குப்பின் இந்த மலைக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் பீரங்கி மேடு ஒன்றும் அமைக்கப்பட்டது.       
4.  மலைக்கோட்டை மீது அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி கோவில் கருவறைகளில் சிலைகள் இல்லாமல் இப்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் திண்டுக்கல் மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.     
5.   ஹைதர்  அலியின்  இளைய  சகோதரி  அமீர்-உன்-நிஷா பேகம்  இறந்தபின்  அவர்  சமாதியில்  கட்டப்பட்ட பள்ளிவாசல்  இன்றும் பேகம்பூர் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது.   
6.  19-ஆம் நூற்றாண்டில் இங்கு கட்டப்பட்டுள்ள புனித ஜோசப் தேவாலயம் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.   
7.  திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டுக்கள் உலகப் புகழ் பெற்றவை. திண்டுக்கல்லில் நிறைய தோல் தொழிற்சாலைகளும், கைத்தறி தொழிற்சாலைகளும் உள்ளன. திண்டுக்கல் அருகில் அமைந்துள்ள சின்னாளப்பட்டியில் தயாராகும் சேலைகள் மிகுந்த புகழ் பெற்றவை. திண்டுக்கல்லில்  தயாரிக்கப்படும் சுருட்டுகளும் பெயர் பெற்றவை. மத்திய அரசாங்கத்தின் புகையிலை ஆராய்ச்சி நிலையம் இங்கு அமைந்துள்ளது. 
8.  திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் பிரியாணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
9.  சுற்றுலாத் தலங்களான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோடை வாசஸ்தலமான கொடைக்கானாலும் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 
   . 

ஆகஸ்ட் 22, 2015

ஊர்ப்புதிர் - 11

ஊர்ப்புதிர் - 11 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 11 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     கானாடுகாத்தான்       
2.     விருதுநகர்               
3.     திருநாகேஸ்வரம்          
4.     நாகர்கோவில்         
5.     பரமக்குடி       
6.      ஆண்டிபட்டி    
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 10 க்கு விடை:   "  மதுரை  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "மதுரை ",  தமிழ்நாடு மதுரை  மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2. இந்த நகரம் கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் என்றும் அழைக்கப்படுகிறது.     
3.  மருத  மரங்கள் மிகுதியாக இருந்ததால், மருதத்துறை என்பது மருவி மதுரை ஆனது என ஒரு கருத்தும், சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் (இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.      
4.  இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான  மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.    
5. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.  
6.  மதுரை மாநகரின் முக்கிய வரலாற்று நினைவிடங்களில் முக்கியமானவை மீனாட்சி அம்மன் கோவிலும், திருமலை நாயக்கர் மகாலும் ஆகும்.  
7. மதுரை மாநகரமானது மீனாட்சி அம்மன் கோவிலை பொது மையமாகக் கொண்டு கோவிலைச் சுற்றி நான்கு நாற்கர தெருக்களாக அமைக்கப்பட்டதாகும். இவ்வமைப்பு மதுரையை ஆண்ட முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி.பி.1159-64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி மூல, மாசி வீதிகள் என்று அழைக்கப்படுகின்றன. 1837 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் கோவிலைச் சுற்றியிருந்த கோட்டை அகற்றப்பட்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேஸ்திரி வீதிகள் அமைக்கப்பட்டன. 
8.  சித்திரைத் திருவிழா (மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்) ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய திருவிழா. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் அவனியாபுரம் ஏறுதழுவல், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பெயர் பெற்றவை. 
9.  சுற்றுலாத் தலங்களான முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், மற்றும் பழமுதிர் சோலை மதுரைக்கு வெகு பக்கத்தில் அமைந்துள்ளன.
10. மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழில் துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. ரப்பர், ரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன. மருத்துவக் கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. 
11.  பன்னாட்டு  விமான  நிலையம் மதுரையில் அமைந்துள்ளது. மதுரையில் மிகப் பெரிய தொடர்வண்டி புகைவண்டி நிலையமும், 3 பெரிய பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. 
12. மதுரை நகரில் அனைத்திந்திய வானொலி, சூரியன் எப்.எம்., ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப்.எம் போன்ற பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, மாலை மலர், தமிழ் முரசு ஆகிய தமிழ் நாளிதழ்களும், ஹிந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித் தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன.        
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   

மே 21, 2015

ஊர்ப்புதிர் - 10

ஊர்ப்புதிர் - 10 ல், தமிழகத்தில் உள்ள  ஒரு ஊரைப் பற்றிய கவிதை ஒன்று குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னொரு ஊரின் பேராம்
       முதலெழுத் தில்லா விட்டால் 
நன்னகர் மன்னர் பேராம் 
     நடுவெழுத் தில்லா விட்டால்
கன்னமா மிருகத் தின்பேர்
     கடையெழுத் தில்லா விட்டால் 
உன்னிய தேனின் பேராம் 
     ஊரின் பேர்விளம் புவீரே.   
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ஊர்ப்புதிருக்கான இந்த கவிதையை புனைந்தவர் யாரென்று தெரிய வில்லை. தெரிந்தவர்கள் எழுதி அனுப்பினால் நன்று.
 
இதுபோன்று வேறு எந்த ஊருக்காவது  ஊர் பெயரை கண்டுபிடிக்க குறிப்புகளுடன் கவிதை வடிவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த கவிதையை அனுப்பினால் நன்று.
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 08 க்கு விடை:   "  திண்டிவனம்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   " திண்டிவனம்  ",  தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி . 
2.   திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. அதனால்தான் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
3.      1000 வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில் (பெரிய கோவில்) மிகவும் பிரசித்தி பெற்றது. 
4.    Oilseeds Research Station இங்கு அமைந்துள்ளது.
5.    அருகிலுள்ள செஞ்சிக் கோட்டையும், கல்வராயன் மலையும் சுற்றுலாத் தலங்களாகும்.    
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   
 
மே 02, 2015

ஊர்ப்புதிர் - 09

ஊர்ப்புதிர் - 09 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 09 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     கொடைக்கானல்      
2.     தொட்டியம்          
3.     வாசுதேவநல்லூர்         
4.     திருவையாறு        
5.     காஞ்சிபுரம்      
6.       பண்ருட்டி   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 08 க்கு விடை:   "  நாகர்கோவில்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "சிதம்பரம் ",  தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2.   இந்த நகரம் நாஞ்சில் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.     
3.  ஸ்ரீநாகராஜாவுக்கு திருக்கோவில்  இங்கு அமைந்துள்ளதால் இந்த நகரம் நாகர்கோவில் என்று அழைக்கப் படுகிறது.     
4.   மீன்பிடிவலை தயாரிப்பதில் இந்த நகரம் மிகவும் பிரசித்தி பெற்றது.   
5.  ISRO Propulsion Complex (Liquid Propulsion Systems Centre) இங்கு அமைந்துள்ளது. Indian Rare Earths Limited (IREL) தொழிற்சாலையும் இங்கு அமைந்துள்ளது. 
6.   கன்னியாகுமரி இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், மண்டைக்காடு ஸ்ரீபகவதியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
7.   இங்கு அமைந்துள்ள St.Xavier Church, CSI Home Church மிகவும் பழமையானவையும், புகழ் பெற்றவையும் ஆகும். 
8.   இந்த நகரத்தை ஒட்டிய சுற்றுலாத் தலங்கள்:  முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், பொய்கை அணை, உலக்கை அருவி. 
9.   கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யும் இந்த ஊரை சேர்ந்தவர்கள்.          
        
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்