ஊர்ப்புதிர் - 14 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 14 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. துவரங்குறிச்சி
2. கும்பகோணம்
3. வேடசந்தூர்
4. பெரியநாயக்கன்பாளையம்
5. ராதாபுரம்
6. வீரபாண்டி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 13 க்கு விடை: " மன்னார்குடி "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. "மன்னார்குடி", தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி .
2. மன்னார்குடி என்றால் விஷ்ணுவின் தலம் என்று பொருள். இந்த நகரம் மன்னை என்றும், மன்னார்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
3. இங்கு அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும் மிகப் பிரசித்தி பெற்றதுமாகும். இந்த கோவிலை சுற்றியுள்ள உயரமான மதில் சுவர் மிகவும் அழகு வாய்ந்தது. மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலம் இவ்வூரின் பெருமையை உணரலாம்.
4. இங்கு அமைந்திருக்கும் மல்லிநாதர் கோவில் மிகவும் புராதன, பிரதான ஜைனர் கோவில் ஆகும்.
5. மன்னார்குடிக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் வடுவூர் பறவை சரணாலயம், முத்துப்பேட்டை லகூன் (சதுப்பு நிலக் காடுகள்) மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.
4. இங்கு அமைந்திருக்கும் மல்லிநாதர் கோவில் மிகவும் புராதன, பிரதான ஜைனர் கோவில் ஆகும்.
5. மன்னார்குடிக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் வடுவூர் பறவை சரணாலயம், முத்துப்பேட்டை லகூன் (சதுப்பு நிலக் காடுகள்) மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்