மே 07, 2017

ஊர்ப்புதிர் - 78


ஊர்ப்புதிர் - 78 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியேபடிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 78 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    குளச்சல்  
2.    கந்தர்வகோட்டை                                                              
3.    வழுதலங்குளம்                                                                  
4.     கருந்துவம்பாடி                                        
5.     செங்கல்பட்டு               
6.    திசையன்விளை     
7.    புதுர்செக்கடி  

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. 

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்  

6 கருத்துகள் :

  1. மூளைக்கு வேலை கொடுக்குமிடமா?! ,மீ எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 6.5.2017 அன்று அனுப்பிய விடை:

    6-4-1-7-3-2-5 -- திருச்செங்கோடு

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 7.5.2017 அன்று அனுப்பிய விடை:

    "திருச்செங்கோடு"

    பதிலளிநீக்கு
  4. திரு சந்தானம் குன்னத்தூர் 7.5.2017 அன்று அனுப்பிய விடை:

    " THIRUCHCHENGODU "

    பதிலளிநீக்கு
  5. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.5.2017 அன்று அனுப்பிய விடை:

    " Thiruchencodu "

    பதிலளிநீக்கு