பிப்ரவரி 05, 2017

ஊர்ப்புதிர் - 66


ஊர்ப்புதிர் - 66 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக,  7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 66 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    கம்பம்           
2.    குறிஞ்சிப்பாடி                                                            
3.    கொடைக்கானல்                                                         
4.    பாளையங்கோட்டை                                                
5.     திட்டக்குடி                             
6.     வேப்பனபள்ளி   
7.    கருடாபுரம்             
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    மதுரை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியம்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 5.2.2017 அன்று அனுப்பிய விடை:

    3-5-7-1-6-4-2

    விடை: கொட்டாம்பட்டி.

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 5.2.2017 அன்று அனுப்பிய விடை:

    கொட்டாம்பட்டி

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.2.2017 அன்று அனுப்பிய விடை:

    Kottaampatti

    பதிலளிநீக்கு