டிசம்பர் 28, 2016

ஊர்ப்புதிர் - 61



ஊர்ப்புதிர் - 61 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 61 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     மயிலாடுதுறை        
2.     திருப்பரங்குன்றம்                                                      
3.     பள்ளத்தூர்                                                     
4.     அரக்கோணம்                                              
5.      மேல்மருவத்தூர்                        
6.      கங்கவள்ளி    
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 28.12.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மயிலாடுதுறை 3
    2. திருப்பரங்குன்றம் 5
    3. பள்ளத்தூர் 1
    4. அரக்கோணம் 6
    5. மேல்மருவத்தூர் 2
    6. கங்கவள்ளி 4

    விடை - பல்லாவரம்

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 31.12.2016 அன்று அனுப்பிய விடை:

    பல்லாவரம்

    பதிலளிநீக்கு