பிப்ரவரி 10, 2016

ஊர்ப்புதிர் - 30

ஊர்ப்புதிர் - 30 ல்,  தமிழகத்தில் உள்ள  ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 30 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     நத்தம்                            
2.     குறிஞ்சிப்பாடி                                   
3.     பையனப்பள்ளி                            
4.     முசிறி                             
5.     நடுவிக்கோட்டை                          
6.      உடன்குடி 
7.      பல்லடம்

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 29 க்கு விடை:   " மயிலாடுதுறை "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " மயிலாடுதுறை  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.       இந்த ஊர் முன்பு மயூரம் என்றும் பிற்காலத்தில் மாயவரம் என்றும்  அழைக்கப்பட்டது.   
3.   சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி ஆற்றின் தென்புறம் உமையவள் மயிலுருவில் தவம் செய்ததாகவும், தவத்தை மெச்சிய சிவன் ஆண்மயிலாக வந்து பெண்மயிலான பார்வதியுடன் நடனமாடியதாகவும் இந்த காரணத்தால் இந்த ஊர் மயிலாடிய காவிரித்துறை (மயிலாடுதுறை) என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 
4.    தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. இந்த  ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள்  அனைத்தும் தலா ஒன்றரை  நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளன. 
5.   "ஆயிரம்  ஆனாலும் மாயுரம் ஆகாது" என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும். 
6.      நகரில்  மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்கள் பிரபலமானவை.  . 
7.    ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவான "கடைமுக தீர்த்தவாரி முழுக்கு" (கடை முழுக்கு) மிகவும் பிரபலமானதாகும்.  
8.     இந்நகரம் நவக்கிரக கோவில்களுக்கு செல்ல ஒரு வாயிலாக அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி  இருக்கும் தரங்கம்பாடி, பாளையார், காரைக்கால், திருமுல்லைவாயல், பிச்சாவரம் சதுப்புக் காடுகள் ஆகியவை பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.        
--------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 
   

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 10.2.2016 அன்று அனுப்பிய விடை:

    usilampatti

    பதிலளிநீக்கு
  2. திரு சந்தானம் குன்னத்தூர் 10.2.2016 அன்று அனுப்பிய விடை:

    Is it Usilampatti?

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 13.2.2016 அன்று அனுப்பிய விடை:

    "உசிலம்பட்டி"

    பதிலளிநீக்கு