பிப்ரவரி 02, 2016

ஊர்ப்புதிர் - 29

ஊர்ப்புதிர் - 29 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 29 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     ஏற்காடு                           
2.     திருவெண்டுறை                                  
3.     நயினார்கோவில்                           
4.     தாழையூத்து                            
5.     மடத்துக்குளம்                         
6.      நல்லாம்பிள்ளை
         
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 28 க்கு விடை:   " அரக்கோணம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " அரக்கோணம்  ",  தமிழ்நாடு  வேலூர்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.     இந்த நகரைச் சுற்றி முக்கிய இடங்களான காஞ்சிபுரம், தக்கோலம், திருப்பதி, திருவாலங்காடு, திருத்தணி, சோளிங்கர்  ஆகிய ஆறு இடங்கள், ஆறு பக்கங்களில், ஆறு கோணங்களில் அமைந்துள்ளதால், இந்த நகரம், ஆறு கோணம் என்றும் பின்னர் அது மருவி அரக்கோணம் என்றும் பெயர் அமைந்ததாக கூறப்படுகிறது. 
3.   தென்னக ரயில்வேயின் பெரிய பணிமனைகளில் ஒன்றான Engineering Workshop மற்றும் Electric Loco Shed இங்கு  அமைந்துள்ளன.
4.       இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உணவுக்கிடங்கு (FCI Godown) இங்கு அமைந்துள்ளது. 
5.   தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய  கடற்படை விமானங்களின் (INS ராஜாளி) ஓடுபாதை இங்குதான் அமைந்துள்ளது.
6.    மிகப்பிரபலமான தொழிற்சாலைகளான MRF (Madras Rubber Factory), Ultratech Cement, Ramco Industries, Best and Crompton Exports இவைகளும் இங்குதான் அமைந்துள்ளன. 
7.       150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த CSI Andrews உயர் பள்ளி இங்குதான் உள்ளது. 
8.    தமிழகத்திலேயே கோடை காலத்தில் அதிக வெப்பம் பதிவாகும் இடமாகவும், மழை காலத்தில் அதிக மழை பதிவாகும் இடமாகவும் அரக்கோணம் விளங்குகிறது.          
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 2.2.2016 அன்று அனுப்பிய விடை:

    1. ஏற்காடு 4
    2. திருவெண்டுறை 6
    3. நயினார்கோவில் 2
    4. தாழையூத்து 5
    5. மடத்துக்குளம் 1
    6. நல்லாம்பிள்ளை 3

    விடை - மயிலாடுதுறை

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 2.2.2016 அன்று அனுப்பிய விடை:

    MAYILADURAI

    பதிலளிநீக்கு
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.2.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை மயிலாடுதுறை

    மடத்துக்குளம்
    நயினார்கோவில்
    நல்லாம்பிள்ளை
    ஏற்காடு
    தாழையூத்து
    திருவெண்டுறை

    பதிலளிநீக்கு