ஜனவரி 19, 2016

ஊர்ப்புதிர் - 27

ஊர்ப்புதிர் - 27 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 27 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அவினாசி                         
2.     மனப்பாரநல்லூர்                              
3.     பெண்ணாடம்                         
4.     ஆலங்குளம்                          
5.     கன்னிவாடி                      
6.       நாமக்கல்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 26 க்கு விடை:   "  சோழவந்தான்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சோழவந்தான்  ",  தமிழ்நாடு  மதுரை  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      சோழவந்தான் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது.    
3.      சோழவந்தான் சோலைக்குறிச்சி என்றும் சனகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.   
4.   பாண்டிய நாட்டில்  இருந்த  இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்வதைக்கண்டு வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். சோழமன்னன் இவ்வூரை "சின்ன தஞ்சை" என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.       
5.      வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு இவை பெருமளவில் விளைவிக்கப் படுகின்றன. 
6.    சனகை மாரியம்மன் கோவில், சனக நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணஸ்வாமி கோவில், ஸ்ரீ பிரளயநாதஸ்வாமி கோவில் இங்கு பிரசித்தி பெற்றவை.            
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

9 கருத்துகள் :

  1. 1. பெண்ணாடம்
    2. கன்னிவாடி
    3. அவினாசி
    4. நாமக்கல்
    5. மனப்பாரநல்லூர்
    6. ஆலங்குளம்

    பென்னாகரம். Saringalaa sir.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ்பாபு 19.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. அவினாசி 3
    2. மனப்பாரநல்லூர் 5
    3. பெண்ணாடம் 1
    4. ஆலங்குளம் 6
    5. கன்னிவாடி 2
    6. நாமக்கல் 4

    விடை: பென்னாகரம்

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 20.1.2016 அன்று அனுப்பிய விடை

    பென்னாகரம்

    பதிலளிநீக்கு
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.1.2016 அன்று அனுப்பிய விடை:

    பென் நாகரம்

    பதிலளிநீக்கு
  5. திரு சந்தானம் குன்னத்தூர் 20.1.2016 அன்று அனுப்பிய விடை:

    Is it pennaagaram?

    பதிலளிநீக்கு