ஜனவரி 12, 2016

ஊர்ப்புதிர் - 26

ஊர்ப்புதிர் - 26 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 26 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அரவக்குறிச்சி                        
2.     மணிமுத்தாறு                             
3.     சோலையூர்                        
4.     வலங்கைமான்                         
5.     கீழக்கரை                     
6.      தண்டந்தோட்டம்     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 25 க்கு விடை:   "  சங்கரன்கோவில்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சங்கரன்கோவில்  ",  தமிழ்நாடு  திருநெல்வேலி  மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய  நகராட்சி.      
2.      சங்கரன்கோவில் முன்பு சங்கரநயினார்கோவில் என்று அழைக்கப்பட்டது.  108 சக்தி தளங்களில் ஒன்று.   
3.      இங்கு அமைந்துள்ள சங்கர நாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் மூலக்கடவுளின் உருவம் ஒருபாதி சிவனாகவும், மறுபாதி விஷ்ணுவாகவும் அமைந்துள்ளது  சிறப்பு. இக்கோவிலின் சங்கரேஸ்வர் வன்மீகநாதர் என்று அழைக்கப் படுகிறார்.  
4.    இவ்வூரில் நடக்கும் ஆடித்தபசுத் திருவிழா மிகச்சிறப்பானது. மற்ற திருவிழாக்களான சித்திரை பிரம்மோத்சவம், ஐப்பசி  திருக்கல்யாணம், தெப்பத் திருவிழா இவையும் சிறப்பானவை.     
5.  இங்கு அமைந்துள்ள பெரிய மலர் சந்தையிலிருந்து மலர்கள் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
6.      இங்கு நெசவாலைகள், நூற்பாலைகள், ஆடை தயாரிப்பாலைகள் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளன. 
7.      சங்கரன்கோவில் பிரியாணி  பெயர்  பெற்றது. 
8.   இவ்வூரின்  பிரபலங்கள்:  வை.கோ (அரசியல் தலைவர்), நடிகர் விவேக்,  நடிகர் S.J.சூர்யா,  எழுத்தாளர் தேவநேயப் பாவாணர்.           
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

8 கருத்துகள் :

  1. 1. சோலையூர்
    2. கீழக்கரை
    3. அரவக்குறிச்சி
    4. தண்டந்தோட்டம்
    5. மணிமுத்தாறு
    6. வலங்கைமான்

    சோழவந்தான். Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  2. சோழவந்தான்: முத்துசுப்ரமண்யம்

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ்பாபு 12.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. அரவக்குறிச்சி 3
    2. மணிமுத்தாறு 5
    3. சோலையூர் 1
    4. வலங்கைமான் 6
    5. கீழக்கரை 2
    6. தண்டந்தோட்டம் 4

    விடை: சோழவந்தான்.

    பதிலளிநீக்கு
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 12.1.2016 அன்று அனுப்பிய விடை:

    சோழவந்தான்

    பதிலளிநீக்கு
  5. திரு சந்தானம் குன்னத்தூர் 12.1.2016 அன்று அனுப்பிய விடை:

    The answer is sOzhavanthAn.

    பதிலளிநீக்கு
  6. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 12.1.2016 அன்று அனுப்பிய விடை:

    Chozhavandhan

    பதிலளிநீக்கு
  7. திரு சாந்தி நாராயணன் 13.1.2016 அன்று அனுப்பிய விடை

    சோலையூர்
    கீழக்கரை
    அரவக்குறிச்சி
    தண்டந்தோட்டம்
    மணிமுத்தாறு
    வலங்கைமான்

    இறுதி விடை:சோழவந்தான்

    பதிலளிநீக்கு