ஜனவரி 04, 2016

ஊர்ப்புதிர் - 25

ஊர்ப்புதிர் - 25 ல், தமிழகத்தில் உள்ள எட்டு   (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 25 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சிக்கல்                       
2.     திருவானைக்காவல்                            
3.     கந்தர்வ கோட்டை                        
4.     சமயபுரம்                        
5.     சேரன்மகாதேவி                     
6.      செங்கோட்டை 
7.       காட்டுமன்னார் கோவில் 
8.       ராசிபுரம்                   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் அமைந்த இவ்வூரில் உள்ள சிவனாலயம் மிகப் பிரசித்தி பெற்றது.  

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 24 க்கு விடை:   "  கோவில்பட்டி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.      " கோவில்பட்டி  ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.   கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், நூற்பாலைகளுக்கும் மிகப் பிரசித்தி பெற்றது.   
3.   இங்கு மூக்கரை விநாயகர் கோவில், அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில், காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில், ராமர் பாதம், சொர்ணமலை கதிரேசன் கோயில் அமைந்துள்ளது. 
4.     வ.உ.சி வழக்கறிஞராக பணிபுரிந்த ஊர் இது.   
5.     இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் மிக்க சுவை பெற்றது.         
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

9 கருத்துகள் :

  1. சங்கரன்கோவில் - முத்துசுப்ரமண்யம்

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ்பாபு 4.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. சிக்கல் 3
    2. திருவானைக்காவல் 8
    3. கந்தர்வ கோட்டை 6
    4. சமயபுரம் 1
    5. சேரன்மகாதேவி 7
    6. செங்கோட்டை 2
    7. காட்டுமன்னார் கோவில் 5
    8. ராசிபுரம் 4

    விடை - சங்கரன்கோவில்

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 4.1.2016 அன்று அனுப்பிய விடை:

    சங்கரன் கோவில்

    பதிலளிநீக்கு
  4. திரு சந்தானம் குன்னத்தூர் 4.1.2016 அன்று அனுப்பிய விடை:

    The answer is SANKARANKOVIL

    பதிலளிநீக்கு
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 5.1.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை சங்கரன் கோவில்

    சமயபுரம்
    செங்கோட்டை
    சிக்கல்
    ராசிபுரம்
    காட்டுமன்னார் கோவில்
    கந்தர்வ கோட்டை
    சேரன்மகாதேவி
    திருவானைக்காவல்

    பதிலளிநீக்கு
  6. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.1.2016 அன்று அனுப்பிய விடை:

    சங்கரன் கோவில்

    பதிலளிநீக்கு