அக்டோபர் 25, 2015

ஊர்ப்புதிர் - 19

ஊர்ப்புதிர் - 19 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 19  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     உறங்கான்பட்டி                 
2.     ஊர்மேலழகியான்                       
3.     கயத்தாறு                  
4.     அந்தியூர்                  
5.     உளுந்தூர்பேட்டை               
6.       திருத்தங்கல்               
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் ஒரு சட்ட மன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 18 க்கு விடை:   "  மார்த்தாண்டம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :


1.       "மார்த்தாண்டம் ",  தமிழ்நாடு  கன்னியாகுமாரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒரு வணிகத் தலமாகும்.    
2.     இந்த ஊர் "தொடுவட்டி" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூரை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா நினைவாக இந்நகருக்கு இந்தப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.      
3.       மார்த்தாண்டம் தேன் புகழ்பெற்று விளங்குகிறது.  தேனீ வளர்ப்பு, தேன் தயாரிப்பு இங்கு முக்கிய தொழிலாகும். மார்த்தாண்டம் எங்கும் பச்சைப் பசேல் என்றிருக்கும்.
4.     இங்குள்ள பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய மற்றும் பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர், மதுரை, வேளாங்கண்ணி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கும், பெங்களூர், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  
5.   இவ்வூருக்கு அருகில் காணத்தக்க இடங்கள்:  பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பேச்சிப்பாறை நீர்த்தேக்கம், தெங்கபட்டணம் கடற்கரை, சித்தாரல் ஜெயின் கோயில் ஆகியவை. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

8 கருத்துகள் :

 1. 1. அந்தியூர்
  2. உறங்கான்பட்டி
  3. உளுந்தூர்பேட்டை
  4. கயத்தாறு
  5. திருத்தங்கல்
  6. ஊர்மேலழகியான்

  அறந்தாங்கி. Saringalaa sir?

  Anbudan,
  Nagarajan Appichigounder.

  பதிலளிநீக்கு
 2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 25.10.2015 அன்று அனுப்பிய விடை:

  அறந்தாங்கி

  பதிலளிநீக்கு
 3. திரு சந்தானம் குன்னத்தூர் 25.10.2015 அன்று அனுப்பிய விடை:

  The answer is aranthaanggi.

  பதிலளிநீக்கு
 4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 25.10.2015 அன்று அனுப்பிய விடை:

  "அறந்தாங்கி".

  The clue helped us to confirm the answer.

  பதிலளிநீக்கு