அக்டோபர் 10, 2015

ஊர்ப்புதிர் - 17

ஊர்ப்புதிர் - 17 ல்தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 17  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     வைத்தீஸ்வரன் கோவில்              
2.     கண்டமனூர்                     
3.     குமாரபாளையம்                 
4.     எடப்பாடி                
5.     திருமயம்             
6.      கோட்டையூர்  
7.      சிங்கம்புணரி              
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 16 க்கு விடை:   "  செங்கல்பட்டு   "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.   "செங்கல்பட்டு ",  தமிழ்நாடு  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி . இது சென்னை மாநகரின் புறநகர் பகுதியாகும்.  
2.  முன்பு இங்குள்ள நீர்நிலைகளில் செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என அழைக்கப்பட்டது.  அதுவே மருவி செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.          
3.      விஜயநகரப் பேரரசு வழி அரசர் கட்டிய கோட்டை இங்குள்ளது. 
4.     சுற்றுலா தலங்களான மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், காஞ்சிபுரம், கொளவாய் ஏரி போன்றவை இந்நகருக்கு வெகு பக்கத்தில் அமைந்துள்ளதால், செங்கல்பட்டு ஒரு சுற்றுலா நகராக உருவெடுத்துள்ளது.     

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

4 கருத்துகள் :

  1. திரு சந்தானம் குன்னத்தூர் 10.10.2015 அன்று அனுப்பிய விடை:

    விடை எட்டயபுரம்

    பதிலளிநீக்கு
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 10.10.2015 அன்று அனுப்பிய விடை:

    vidai : எட்டயபுரம்

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 11.10.2015 அன்று அனுப்பிய விடை:

    "எட்டயபுரம்"

    பதிலளிநீக்கு