செப்டம்பர் 07, 2015

ஊர்ப்புதிர் - 13

ஊர்ப்புதிர் - 13 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 13  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     சாத்தான்குளம்         
2.     அவினாசி                 
3.     சேடப்பட்டி            
4.     மயிலாடுதுறை           
5.     நன்னிலம்       
6.      மேட்டூர்      
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 12 க்கு விடை:   "  விழுப்புரம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "விழுப்புரம் ",  தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான ஒரு நகராட்சி .
2.   தமிழ்நாட்டின்  இரண்டாவது மிகப் பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.      
3.   செஞ்சிக்கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும். 
4.   திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்கள் ஆகும். 
      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

7 கருத்துகள் :

  1. திரு சந்தானம் குன்னத்தூர் 7.8.15 அன்று அனுப்பிய விடை :

    Mannaarkudi.

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 8.8.15 அன்று அனுப்பிய விடை :

    "மன்னார்குடி" Took just a second for this!

    பதிலளிநீக்கு
  3. திருமதி சாந்தி நாராயணன் 8.8.15 அன்று அனுப்பிய விடை :

    மயிலாடுதுறை
    நன்னிலம்
    அவினாசி
    மேட்டூர்
    சாத்தான்குளம்
    சேடப்பட்டி
    இறுதி விடை :மன்னார்குடி

    பதிலளிநீக்கு
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 10.8.15 அன்று அனுப்பிய விடை :

    மயிலாடுதுறை
    நன்னிலம்
    அவினாசி
    மேட்டூர்
    சாத்தான்குளம்
    சேடப்பட்டி

    மன்னார்குடி

    பதிலளிநீக்கு