ஆகஸ்ட் 30, 2015

ஊர்ப்புதிர் - 12

ஊர்ப்புதிர் - 12 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 12 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     தர்மபுரி        
2.     சின்னசேலம்                
3.     கழுகுமலை           
4.     பட்டிவீரன்பட்டி          
5.     விருத்தாசலம்      
6.       மணப்பாறை     
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 11 க்கு விடை:   "  திண்டுக்கல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.  "திண்டுக்கல் ",  தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2.  ஊரின் நடுவே திண்டை (தலையணை) போல பெரிய மலை இருப்பதால் திண்டுக்கல் என்று பெயர் வந்ததாக கருதலாம். திண்டி என்ற கொடுங்கோல் மன்னன் இந்நகரை ஆட்சி புரிந்ததாகவும், அவனை சிவன் (ஈஸ்வரன்) அழித்ததனால் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் கருத்து நிலவுகிறது.      
3.  திண்டுக்கல்லை ஆண்ட நாயக்கர்களால் கட்டப்பட்ட மலைக்கோட்டையை அவர்களுக்குப் பின் ஆண்ட ஹைதர் அலி கோட்டையை சுற்றி ராணுவ தளவாடங்கள் வைக்கும் அறைகளையும், வீரர்கள் தாங்கும் அறைகளையும் உருவாக்கினார். அதற்குப்பின் இந்த மலைக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் பீரங்கி மேடு ஒன்றும் அமைக்கப்பட்டது.       
4.  மலைக்கோட்டை மீது அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி கோவில் கருவறைகளில் சிலைகள் இல்லாமல் இப்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் திண்டுக்கல் மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.     
5.   ஹைதர்  அலியின்  இளைய  சகோதரி  அமீர்-உன்-நிஷா பேகம்  இறந்தபின்  அவர்  சமாதியில்  கட்டப்பட்ட பள்ளிவாசல்  இன்றும் பேகம்பூர் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது.   
6.  19-ஆம் நூற்றாண்டில் இங்கு கட்டப்பட்டுள்ள புனித ஜோசப் தேவாலயம் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.   
7.  திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டுக்கள் உலகப் புகழ் பெற்றவை. திண்டுக்கல்லில் நிறைய தோல் தொழிற்சாலைகளும், கைத்தறி தொழிற்சாலைகளும் உள்ளன. திண்டுக்கல் அருகில் அமைந்துள்ள சின்னாளப்பட்டியில் தயாராகும் சேலைகள் மிகுந்த புகழ் பெற்றவை. திண்டுக்கல்லில்  தயாரிக்கப்படும் சுருட்டுகளும் பெயர் பெற்றவை. மத்திய அரசாங்கத்தின் புகையிலை ஆராய்ச்சி நிலையம் இங்கு அமைந்துள்ளது. 
8.  திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் பிரியாணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
9.  சுற்றுலாத் தலங்களான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோடை வாசஸ்தலமான கொடைக்கானாலும் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 
   . 

8 கருத்துகள் :

  1. விழுப்புரம் - முத்து

    பதிலளிநீக்கு
  2. திரு சந்தானம் குன்னத்தூர் 30.8.15 அன்று அனுப்பிய விடை:

    " The answer is VIZHUPPURAM."

    பதிலளிநீக்கு
  3. திருமதி சாந்தி நாராயணன் 30.8.15 அன்று அனுப்பிய விடை:

    விருத்தாசலம்
    கழுகுமலை
    மணப்பாறை
    தருமபுரி
    பட்டிவீ ரன்பட்டி
    சின்னசேலம்

    இறுதி விடை:விழுப்புரம்

    பதிலளிநீக்கு
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 30.8.15 அன்று அனுப்பிய விடை:

    விடை : விழுப்புரம்

    பதிலளிநீக்கு
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 31.8.15 அன்று அனுப்பிய விடை:

    விருத்தாசலம்
    கழுகுமலை
    மணப்பாறை
    தர்மபுரி
    பட்டிவீரன்பட்டி
    சின்னசேலம்

    விழுப்புரம்

    பதிலளிநீக்கு
  6. திருமதி நாகமணி ஆனந்தம் 31.8.15 அன்று அனுப்பிய விடை:

    " vizhuppuram! "

    பதிலளிநீக்கு