மார்ச் 28, 2015

ஊர்ப்புதிர் - 07


ஊர்ப்புதிர் - 07 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 07 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மதகுப்பட்டி    
2.     ஆண்டிபட்டி        
3.     பெரியகுளம்       
4.     கோயம்புத்தூர்       
5.     சிங்கப்பெருமாள் கோயில்    
6.       செக்கானூரணி 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 05 க்கு விடை:   "  வாணியம்பாடி   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "வாணியம்பாடி ",  தமிழ்நாடு வேலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி .
2.   இந்த நகரம் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.    
3.  தோல்  பதனிடும்  தொழிற்சாலைகளும்,  தோல் ஆடைகள் மற்றும்   தோல்    காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்  இங்கு நிறைய உள்ளன. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, தோலாலான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.   
4.   வாணியம்பாடி பிரியாணி மிகவும் பிரபலமான ஒன்று.  
5.  இங்கு அமைந்துள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலும், அதிதீஸ்வரர் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
6.   ஆசியா கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கு கருவி  இங்கு பக்கத்தில் உள்ள காவலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.     
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   

6 கருத்துகள் :

  1. சிதம்பரம் (ஆண்டிபட்டியை ஆண்டிப்பட்டி என்று தவறாக எடுத்திருந்தேன் - அதனால் முழிக்க வேண்டியிருந்தது!)

    பதிலளிநீக்கு
  2. 1. சிங்கப்பெருமாள் கோயில்
    2. மதகுப்பட்டி
    3. கோயம்புத்தூர்
    4. ஆண்டிபட்டி
    5. செக்கானூரணி
    6. பெரியகுளம்

    சிதம்பரம்

    Saringalaa Ramarao sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 29.3.15 அன்று அனுப்பிய விடை:

    " சிதம்பரம் "

    பதிலளிநீக்கு
  4. திருமதி சாந்தி நாராயணன் 10.4.15 அன்று அனுப்பிய விடை:

    சிங்கப்பெருமாள் கோவில்
    மதகுப்பட்டி
    கோயம்புத்தூர்
    ஆண்டிபட்டி
    செக்கானூரணி
    பெரியகுளம்

    இறுதி விடை " சிதம்பரம் "

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. திருமதி நாகமணி ஆனந்தம் 13.4.15 அன்று அனுப்பிய விடை:

    " Chithambaram "

    பதிலளிநீக்கு